பாஜகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு மீண்டும் தாமதம்
பாஜகவின் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் பாஜக தாமதப்படுத்தி வருவது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. சட்டமன்ற தேர்தல் அடுத்த மதம் நடைபெற உள்ள நிலையில்,அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினமே பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தாற்போது மீண்டும் அறிவிப்பு தள்ளிபோகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக தகவல் வெளியாகி. அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த நிலையில் இந்த 20 தொகுதிகளில் திமுக கட்சி நேரடியாக பாஜகவுடன் மோதுகின்றன. இதனால் தற்போது வலுவான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் டெல்லியில் தேசியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.