பாஜக வேட்பாளர் குஷ்பு மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு
election
bjp
candidate
kushboo
By Jon
தேர்தல் விதியை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான தீவிர வாக்கு சேகரிப்பில் ஒவ்வொரு கட்சியும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளரான குஷ்பு மீது தேர்தல் விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மசூதி அருகே பிரசாரம் செய்ய போலீசார் அனுமதிக்காத போது, அவர் பிரசாரம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீஸார் அவர் மீது 143 மற்றும் 188 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.