கொத்து தோசைப் போட்ட பாஜக வேட்பாளர்
சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர், வாக்காளர்களை கவர, கவுதமியின் ஆலோசனையின் பேரில் ஓட்டலில் சுட்ட தோசை கிழிந்து கந்தலானது. துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியுள்ள வினோஜ், நடிகை கவுதமி, சிவாஜியின் பேரன் நடிகர் துஷ்யந் ஆகியோருடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் நடிகை கவுதமியின் ஆலோசனையின் பேரில் தோசை சுட்டார். தோசையை ஊற்றிய சிறிது நேரத்திலேயே அதனை திரும்பி போடுவதற்காக அதனை சுற்றி தேய்த்து கரண்டியால் அதனை திருப்பிப் போட முயன்றார். அவரது பேட் லக் தோசை இரண்டாக கிழிந்தது.
அதனை பார்த்த கவுதமி உள்ளிட்ட அனைவரும் கைதட்டி வேட்பாளர் வினோஜை உற்சாகப்படுத்தினர். ஆனாலும் சோர்வைடையாத வினோஜ் அந்த தோசையை வட்ட வடிவமாக கொண்டு வருவதற்கு மீண்டும் புரட்டிப்போட இறுதியில் அது கொத்து பரோட்டா போல கொத்து தோசை வந்தது குறிப்பிடதக்கது.