"எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன்": பாஜக வேட்பாளர் அண்ணாமலை சர்ச்சைப் பேச்சு

election bjp candidate annamalai Aravakurichi
By Jon Apr 01, 2021 01:59 PM GMT
Report

எனக்கு இன்னொரு முகம் இருக்குது என்றும் அது கர்நாடக முகம் என்றும் அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன் என்று அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் சமீபத்தில் அவர் செய்த பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், “செந்தில்பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன். நான் ஐபிஎஸ் பதவியில் இருந்த காலத்தில் உன்னைப் போல் எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன்.

  "எத்தனையோ பிராடுகளை பார்த்து இருக்கிறேன்": பாஜக வேட்பாளர் அண்ணாமலை சர்ச்சைப் பேச்சு | Bjp Candidate Annamalai Controversy Speech Dmk

எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கின்றேன் நான் வன்முறை இல்லாமல் நியாயமான அரசியல் செய்ய வந்துள்ளேன்.

என் மீது வன்முறையை திணித்து, நான் வன்முறை செய்ததாக மாற்ற வேண்டாம். நான் போராடுவது எல்லாம் மக்களான உங்களுக்காக தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். திமுகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்ணாமலை பேசிய இந்த பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.