sanitary napkin-க்கு கூட ஜிஎஸ்டி ஏன்? கேள்வி கேட்ட பெண்; கடுமையாக தாக்கிய பாஜகவினர்!
ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கேள்வி எழுப்பிய பெண்ணை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்.
கேள்வி கேட்ட பெண்
நடப்பாண்டின் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக நடக்கவிருக்கும் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில்,திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினரிடம் சானிட்டரி நாப்கினுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து இளம்பெண் சங்கீதா என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாக்கிய பாஜகவினர்
இதற்கு ஆத்திரமடைந்த பாஜகவினர் அப்பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் நிர்வாகியான சின்னசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தன்னை தாக்கிய சங்கீதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலுக்கு ஆளான சங்கீதா, திராவிடர் விடுதலைக் கழகத்தில் மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.