நாளை மக்களவை நடவடிக்கை கூட்டத்தில் பாஜகவினர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்
நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் பாஜகவினர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 29 அன்று நிறைவடைந்தது. அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை பா.க.க உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள பா.ஜ.க உத்தரவிட்டு உள்ளது.
நாளை 23 செவ்வாய்க்கிழமை மக்களவையில் மிக முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றபட இருப்பதாலும் ,கலந்துரையாடல் இருப்பதால் மக்களவையில் உள்ள அனைத்து பா.ஜ.க. எம்.பிக்களும் கலந்துகொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கட்சியின் தலைமை கொறடா ராகேஷ் சிங் கேட்டு கொண்டு உள்ளார்.