மேற்கு வங்க வன்முறை - நாளை நாடு முழுவதும் தர்ணா நடத்தப்போவதாக பாஜக அறிவிப்பு

BJP West Bengal Mamata Banerjee Trinamool Congress
By mohanelango May 04, 2021 10:47 AM GMT
Report

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் மட்டுமே வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் சில இடங்களில் கொண்டாட்டங்கள் மோதலில் முடிந்தன. இந்த கலவரத்தில் 10 பேர் உயிரழந்துள்ளனர். 

மேற்கு வங்க வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி குற்றம்சுமத்தி வருகின்றன. இது தொடர்பாக மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்தில் பார்வையிட உள்ளார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை கண்டித்து நாடு தழுவிய அளவில் தர்ணாவில் ஈடுபடப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.