தமிழக சட்டசபைக்கு பாஜக செல்வது உறுதி - அண்ணாமலை பேச்சு
"நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று தமிழக சபையில் அடியெடுத்து வைக்கும்" என பாஜக கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தை, அரவக்குறிச்சி, பா.ஜ., வேட்பாளரும், அக்கட்சி துணை தலைவருமான அண்ணாமலை பார்வையிட்டார்.
அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது,
இன்று முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகள் வெளியாகும். இதில் ஓரளவுக்கு யார் வெற்றிபெறுவர் என்பது தெரிந்துவிடும். 2016ம் ஆண்டு பெண்களின் ஒட்டுக் குறித்து தவறாக கணித்துவிட்டனர். ஆனால் இந்த முறை அதிகபடியான பெண்களின் ஓட்டு அதிமுக கூட்டணிக்கே கிடைத்துள்ளது.
அதனால் தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக போட்டியிட்ட 20 இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று தமிழக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் என்றும் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.