புதிய கட்சி தொடங்கியிருக்கும் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி - அண்ணாமலை!
நடிகர் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
அதன்படி கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை.
அண்ணாமலை வாழ்த்து
அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு. விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.