ஆதினம் மேல கை வச்சா விளைவுகள் மோசமாக இருக்கும் : எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
தப்பி தவறி ஆதினத்தை எதுவும் செய்து விடாதீர்கள் பின் விளைவு படு மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அன்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அண்ணாமலை தி.மு.க ஆட்சி சாமானிய மக்களுக்கு விரோதமான ஆட்சியாக உள்ளது.
சமூக நீதியை பற்றி பேச தி.மு.க விற்கு எந்த அருகதையும் கிடையாது. மத்திய அமைப்பு சாரா தொழிலாளர்களை மேம்படுத்துவதற்காக அட்டல் பென்சன் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். தி.மு.க வீசும் ஒவ்வொரு கல்லையும் எடுத்து மோடி கோட்டை கட்டி அதில் தொழிலாளர்களை அமர வைப்பார்.

தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி எவ்வளவு என்பது கூட முதலமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரியவில்லை. தமிழகத்திற்கு வராது வராது என கூறி கொண்டிருந்த 9,600 கோடி ஜி.எஸ்.டியை பிரதமர் விடுவித்துள்ளார்.அமைச்சர்களுக்கு கூட திராவிட மாடல் அரசு என்றால் என்ன கூட தெரியவில்லை.
அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருப்பதாக கூறினார். சேகர் பாபு சந்நியாசியகளை மிரட்டுவதை வேலையாக வைத்துள்ளார். தற்போது மதுரை ஆதினத்தை மிரட்டி உள்ளார்.
தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி வேறு வேலை இல்லாமல் ஆதினத்தை பத்து நிமிடங்கள் பார்த்துள்ளாரா? தப்பி தவறி ஆதினத்தை எதுவும் செய்து விடாதீர்கள் பின் விளைவு படு மோசமாக இருக்கும். எந்த மொழியும் திணிக்கப்படாது என மோடி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது மொழி விருப்ப மொழி என்று தான் புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்த கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் செல்வதில்லை. 1974 ல் கலைஞர் இரண்டு தவறுகள் செய்தார்.
ஒன்று காவிரி ஒப்புந்தத்தை நீட்டிப்பு செய்யாதது அதனால் கர்நாடக அரசு அம்மாநிலத்தில் 5 அணைகள் கட்டியது. மற்றொன்று கட்சத் தீவை தாரை வார்த்த போது அமைதி காத்தது.

ஆனால் இன்று மேகத்தாட்டு அணை குறித்தும் கச்சத்தீவும் பற்றியும் முதலமைச்சர் பேசுகிறார். அவருக்கு இதுகுறித்து பேச எந்த முகாந்திரமும் கிடையாது. பல்வேறு தவறுகளை செய்து விட்டு எந்த தவறுகளையும் செய்யாதது போல் தி.மு.க அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
தி.மு.க வின் ஊழலை பா.ஜ.க அம்பலப்படுத்தி கொண்டே தான் இருக்கும். தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 25 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் எனக் கூறினார்.