தமிழக பாஜக மாநில தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் அண்ணாமலை!

BJP Tamilnadu Annamalai
By Thahir Jul 16, 2021 05:24 AM GMT
Report

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை அக்கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா அறிவித்திருந்தார்.

தமிழக பாஜக மாநில தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் அண்ணாமலை! | Bjp Annamalai Tamilnadu

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டதால் அந்த பதவிக்கு இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இருவருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் எம்.எல்.ஏவாக இருப்பதால் அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் அண்ணாமலை! | Bjp Annamalai Tamilnadu

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது.

இன்று தாம்பரமத்தில் இருந்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்துக்கு செல்ல உள்ள அண்ணாமலைக்கு மதியம் 1.45 மணிக்கு கமலாலயத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.