”பிஜேபி ஒரு கூட்டு கட்சி” -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக ஒரு தனிமனித கட்சி கிடையாது,பிஜேபி ஒரு கூட்டு கட்சி,தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிதமனித கட்சிகள் என தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை மதியம் கமலாலயத்தில் பதவியேற்க உள்ளார்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தலைவர் என்ற பொறுப்பு, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதாகும்,நிச்சியமாக பாஜகவைக் இன்று வளர்க்கவும்,வலுபடுத்த வேண்டும்.இங்கு பாஜக சார்பில் அதிக எம்.எல்.ஏக்கள் ,எம்.பிக்கக் இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு என்றார்.
மேலும் பேசிய அவர் பாஜகவின் சித்தாந்தம் ,பாஜகவின் திட்டங்களைக் ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டு போய் சேர்ப்போம்.சீனியர்கள் இருந்தாலும் ,அனைத்து தலைவர்களையும் அரவனைத்து செல்வேன்.
திமுகவைக் எதிர்க்க,பாஜகவின் கொள்கைகளைக் எடுத்து சொன்னால் போதும்.பாஜக சார்பில் சட்டமன்றத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தாலும் கூட ,திமுக பேசுகின்ற அனைத்து அரசியலும்
எங்களைக் சார்ந்து தான் இருக்கிறது..அதைக் எதிர்க்க எங்களின் அரசியலையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறினார்.