கே.டி.ராகவன் மீது வீண்பழி, சட்டம் முன்பு உண்மையை நிரூபிப்பார்- அண்ணாமலை அதிரடி
பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று இன்று காலை யூடியூப்பில் வெளியிடப்பட்ட நிலையில் பாஜக கட்சி பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார்.
Press statement pic.twitter.com/7iPCP5PqNZ
— K.Annamalai (@annamalai_k) August 24, 2021
இது குறித்து இன்று பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ செய்திகளை அறிந்தேன் என்றும், இந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்து இது குறித்து பேசினார் என்றும் கூறினார்.
அப்போது அவர் கூறிய கருத்தை கேட்டு, தன்னிடம் ஆதாரங்களை காட்டு என்று கூறியதாகவும், அதற்கு மதன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் இன்று வீடியோ வெளியான நிலையில் கே.டி.ராகவனை அழைத்து ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது அவர், 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இவ்வாறு செய்வதாக தெரிவித்தார்.
மேலும் இதை அவர் சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.