பாஜக ஆட்சிக்கு வந்தால் போலீசாருக்கு 8 மணி நேர வேலை, வாரம் 2 விடுமுறை - அண்ணாமலை!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு தினமும் 8 மணிநேரம் மட்டுமே பணி வழங்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சேலம் மாவட்டத்தில் "என் மண், என் மக்கள்" நடைப்பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினருக்கு தினமும் 8 மணிநேரம் மட்டுமே பணி வழங்கப்படும்.
பேச்சு
வாரம் இருமுறை விடுமுறை வழங்கப்படும். விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறையாக இல்லாமல், பொது மக்களுக்கு சேவை செய்யும் காவல் துறையாக மாற்றுவோம்.
மன உளைச்சல் இல்லாத வகையில் தமிழக காவல்துறையை மாற்ற வேண்டும். மனம் திருந்தி பொது வாழ்க்கைக்கு வரும் முன்னாள் குற்றவாளிகளையும் காவல்துறை அரவணைக்க வேண்டியுள்ளது” என்றார்.