தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து: Y+ பாதுகாப்பு

police politician ips
By Jon Feb 08, 2021 03:56 PM GMT
Report

தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவலர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரினால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.

மேலும் அவர் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் ஐந்து போலீசாரும், வெளியில் செல்லும் போது இருவரும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்பது தனக்கே ஆச்சரியமாக இருப்பதாகவும், எந்தவித மதத்திற்கும் எதிராக தான் பேசியதில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.