இந்தியாவிலேயே மோசமான எம்பி இவர்தான் - கொந்தளித்த அண்ணாமலை!
இந்தியாவிலேயே மோசமான எம்பி ஆ.ராசா தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் "திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது.
இதுதான் ஜனநாயகமா? , ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். திமுகவின் அப்பாக்கள் அமைச்சர்கள், மகன்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு பிரச்சாரம் செய்வது முதல்வரின் மகன் உதயநிதி. 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா.
மோசமான எம்பி
அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலும் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான்.
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது. அடுத்த 7 நாட்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். கார்யகர்த்தாக்கள் இன்னும் ஒரு வாரம் வரை சாப்பிடாமல் உறங்காமல் கடுமையாக உழைத்தால்தான் பிரதமர் மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக முடியும்" என்று தெரிவித்துள்ளார்.