"சென்னை மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
bjpannamalaionurbanelections
bjpvictoryacrosstn
annamalaisayslotusblooms
By Swetha Subash
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர்,
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது எந்தவிதமான புகாரும் கிடையாது. அவர்கள் மக்களை கவர்ந்துள்ளார்கள்.

சென்னை மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும். ஆளுங்கட்சியினரின் ஆராஜகங்கள் அனைத்து பகுதியிலும் நடக்கிறது.
தேர்தல் ஆணையம் பாரா முகமாகவே இருக்கிறது. எதிர்பார்த்த அளவு அவர்கள் வேலை செய்ய வில்லை. தேர்தலை முறையாக நடத்துவார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.“ என கூறினார்.