திமுகவின் அரசியல் வரலாறே அந்தர் பல்டிக்கள் தான் - அண்ணாமலை ஆவேசம்!
திமுகவின் அரசியல் வரலாறே இது போன்ற அந்தர் பல்டிக்களால் ஆனது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எப்போதெல்லாம் தமிழகத்தில் திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கோபக் குரல் எழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம் திமுக முன்வைக்கும் மடைமாற்றுத் தந்திரங்கள், இந்தி எதிர்ப்பு மற்றும் இந்து மத எதிர்ப்பு.
மறைந்த கருணாநிதி முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொடங்கிய இந்த மடைமாற்று உத்திகளுடன், அர்த்தமற்ற ஆளுநர் எதிர்ப்பையும் கூடுதலாகச் சேர்த்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இருபத்தைந்து ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருந்த விவசாய நிலங்களைப் பயன்படுத்தாமல், அவற்றைத் தரிசு நிலமாக்கி, இப்போது யாருக்கும் பயன்படாத நிலையில், பொதுமக்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நேற்றைய தினம், திமுக அரசுக்கு எதிராகப் போராடிய திருவண்ணாமலை மாவாட்ட விவசாயிகள் மீது குண்டர் சப்டத்தில் வழக்கு தொடர்ந்து, மூக்குடைபட்ட தோல்வியை திசைதிருப்ப, கடந்த 2022 ஆம் ஆண்டே நீர்த்துப் பாண, பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்சினையை மீண்டும் ஒரு முறை முன்வைத்திருக்கிறார்.
நாள்தோறும் சீர்குலையும் சப்டம் ஒழுங்கு பற்றியோ, மதுவால் ஏற்படும் தொடர் மரணங்கள் பற்றியோ, முடங்கிப் போயிருக்கும் தொழில்துறை பற்றியோ, பொதுமக்கனை நேரடியாகப் பாதிக்கும் விலைவாசி உயர்வைப் பற்றியோ கவலை இல்லாமல், திமுகவுக்கு வருமானம் வரும் வழிகவில் மட்டுமே முதலமைச்சர் கவனம் ஊலுத்திக் கொண்டிருக்கிறார்.
அந்தர் பல்டி
கடந்த 1994-ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா கொண்டு வந்த, பல்கலைக்கழுகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற சட்டத்திற்கு, அன்றைய ஆளுநராக இருந்து அமரர் வன்னாஹட்டி ஒப்புதல் அளிக்க மறுத்தார்.
திமுகவைப் பொறுத்தவரை, இந்த சட்டமே தேவையற்றது என்று கூறினார் திமுக தலைவர் கருணாநிதி. 1996-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த உடனே, அன்றைய கல்வித் துறை அமைச்சரும், திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளருமாக இருந்த பேராசிமியர் அன்பழகன், முதலமைச்சர் வேந்தரானால் கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேவ்விக்குறியாகி விடும். பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல் படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டு அந்த சட்டத்த் திரும்பப் பெற்றார். தற்போது அதே போன்ற சட்டத்தை திமுக மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது நகைப்பிற்குறியது. ஆனால், திமுகவின் அரசியல் வரலாறே இது போன்ற அந்தர் பல்டிக்களால் ஆனது என்பதால், இதில் ஆச்சமியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
மேற்கு வங்க மாநில விஸ்வ-பாரதி மத்தியப் பல்கலைக்கழுகத்தின் வேந்தராக, மாண்புமிகு பாரதப் நிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள். விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தின் 1951 ஆம் ஆண்டு சட்டப்படி அதன் வேந்தராக பாரதப் பிரதமர்களே. பிரதமர் நேரு ஊாடங்கி, முன்னான் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சின் வரையிலும் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருந்தவர்களே! காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, சம்பாதிக்க வசதியான அமைச்சர் பதவிகள் வாங்குவதில் குறியாக இருந்த திமுகவினருக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.