மிஸ்டர் அண்ணாமலை எந்த ஆதாரத்தை கேட்டா எதை கொடுத்துருக்கிங்க? - ட்விட்டரில் மோதும் அண்ணாமலை , செந்தில் பாலாஜி !

annamalai senthilbalaji bjpleader
By Irumporai Oct 20, 2021 02:08 PM GMT
Report

மின்வாரிய துறையில் நடந்த முறைகேடுகள்   குறித்த ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்று கெடு கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தனது ட்விட்டர் பதிவில் பதில் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை இன்று  சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி:

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு தான் வர தயார்.

அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி காலவகாசம் வழங்கினார்.

இந்த நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பை தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதில், மின்துறை அமைச்சர் ஆதாரம் கேட்கிறார். அவருக்கான ஒரு சாம்பிள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை.

பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று ரூ.29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. பதில் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில்:

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல் அனுப்பியுள்ளார்.

மேலும், 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில்நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டும்

பின்னர், அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை. என பதில் கூறியுள்ளார்.