பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி? அண்ணாமலை சொன்ன பதில்

BJP K. Annamalai
By Karthikraja Jun 01, 2026 01:45 PM GMT
Report

புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

கட்சி தொடங்கும் அண்ணாமலை?

2021 ஆம் ஆண்டு முதல் 2025 வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை.

திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு குறித்து தினமும் செய்தியாளர் சந்திப்பு, என் மண் என் மக்கள் யாத்திரை என பாஜகவில் இளைஞர்கள் சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 

பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி? அண்ணாமலை சொன்ன பதில் | Bjp Annamalai React For Start New Party

பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக, அண்ணாமலையின் விமர்சனத்தால் கூட்டணியை முறித்தது.

இதனையடுத்து, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவை கூட்டணியில் இணைக்க, அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கியது பாஜக தேசிய தலைமை.

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பின்னர், அண்ணாமலைக்கு வேறு பதவிகள் தரப்படவில்லை.

இதனால், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் அண்ணாமலை அறிவித்தார்.

இதனையடுத்து, வரும் ஜூன் 4 ஆம் தேதி தனது பிறந்த நாளன்று, பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. 

பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி? அண்ணாமலை சொன்ன பதில் | Bjp Annamalai React For Start New Party

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.

இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு, வழக்கத்திற்கு மாறாக பாஜக கொடி இல்லாத காரில் வருகை தந்தார்.

தனிக்கட்சி தொடங்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "பொறுமையாக உட்கார்ந்து 2 நாட்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.