எல்லாருக்கும் என்ன சட்டமோ அதுதான் ராகுல்காந்திக்கும் - அண்ணாமலை
ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
பதவி பறிப்பு
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள் என சர்ச்சையாக பேசியதற்கு எதிராக குஜராத் எம்எல்ஏ புர்னேஷ் தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளி என்றும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் குஜராத் சூரத் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உடனடி ஜாமின் வழங்கியது. தொடர்ந்து, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது அதனையடுத்து, தற்போது எம்பி பதவியில் இருந்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கரஸ் கட்சி உள்பட எதிர்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன.
அண்ணாமலை கருத்து
இதனால் 8 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் நிலவிவருகிறது. இதுகுறித்து, அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி. இதனை மக்களவை செயலகம் தனது அதிகாரத்தின் மூலம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து பதவி தகுதி நீக்கம் செய்துள்ளது.
லட்சத்தீவு எம்பி முகமது பைசலுக்கு இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இந்த தண்டனை தொடர்பாக மேல் முறையீடு செய்யலாம். ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.