டீ-க்கு பணம் வாங்க மறுத்த அதிமுக கடை உரிமையாளர் - உடனே அண்ணாமலை செய்த நெகிழ்சசி செயல்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை சேர்ந்த ஒருவரின் கடைக்கு சென்று காப்பி அருந்தியுள்ளார்.
நடைப் பயணம்
பாஜக சார்பில் ஊழலுக்கு எதிராக என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இந்த பயணத்தை அண்ணாமலை மேற்கொள்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் பயணம் மேற்கொண்டார் அண்ணாமலை.
ஒரு காப்பிக்கு ரூ.500
அப்போது அதிமுகவை சேர்ந்த முனியசாமி என்ற நபரின் டீ கடைக்கு சென்று அங்கு காப்பி அருந்தினார். ஆனால் காப்பிக்கு பணம் கொடுத்தபோது அதனை வாங்க மறுத்துள்ளார் முனியசாமி.
பின்னர் அவரை கையேடு அழைத்து சென்ற அண்ணாமலை கல்லாப்பெட்டியில் 500 ரூபாயை வைத்தார். பின்னர் முனியசாமியிடம் 'இது காப்பி குடித்ததிற்கான பணம் கிடையாது, இதை பத்திரமாக கல்லாப்பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டார்.