Tuesday, Jul 22, 2025

“நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்” - முதலமைச்சருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

mkstalin69thbirthday bjpannamalaigreetsstalin
By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

[2RQYEC ]

அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள அவர்,

'மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்!' என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா,கருணாநிதி நினைவிடங்களில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.