திமுகவுக்கு பாஜக தான் எதிரி - அண்ணாமலை!
திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கின்றது, தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக ஒட்டு கேட்காது, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர் உள்ளது தான் திமுகவின் சிந்தாந்தம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தையின் மறைவிற்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மாநிலங்களில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன், நிச்சயமாக அனைத்து பகுதிகளுக்கும் செல்வேன்.
ஊரடங்கு தளர்வு வந்தால் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தவுள்ளோம், சிந்தாந்த அடிப்படையிலான கட்சி் தான் பாஜக எனவும், திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிகாட்டுவோம், அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள், மோடியின் நலத்திட்டங்ளால் தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் பலன் பெற்றுள்ளனர், இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு பெறும்.
மேலும் அவர் பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்கள் ஒட்டுகேட்பு என்ற புகார் மீது மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளனர், வாட்ஸ் அப் நிறுவனம் பெகாசஸ் மூலமாக கிராக் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது, தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது, ஒட்டு கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்கின்றது.
பெகாசஸ் ஸ்பைவேரிடம் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல, அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தி தான் ஒட்டு கேட்பு விவகாரம் எனவும், தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் கட்சி பாஜக, ஒட்டுகேட்பு புகார் என்பது பொய் செய்தி பாஜக கூட்டாக பணி செய்துவருகிறோம்.
வேல்யாத்திரை மக்களின் வேள்விக்காக நடைபெற்றது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் பாஜகவின் யாத்திரைகள், திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கின்றது, நாங்கள் திராவிட சிந்தாந்தம் பேச விரும்பவில்லை எனவும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர் உள்ளது தான் திமுகவின் சிந்தாந்தம், திமுக தேர்தலில் பொய்யான சிந்தாந்தந்தை கூறி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.