கர்நாடகாவால் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது - ஆவேசமான அண்ணாமலை

Mekedatu dam Annamalai Tn BJP
By Petchi Avudaiappan Jul 30, 2021 12:31 AM GMT
Report

 மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக உள்ளோம் என கூறியிருந்தார். மேலும் சட்டப்படி தங்கள் பக்கமே நியாயம் இருப்பதாகவும், காவிரியின் உபரிநீரை பயன்படுத்திக்கொள்வது தங்கள் உரிமை என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவால் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது - ஆவேசமான அண்ணாமலை | Bjp Annamalai Condemn To Karnataka Cm

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது. கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது. மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தெரிவித்திருக்கிறார்.

மேலும், மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.