எனக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை - அண்ணாமலை பேட்டி!

Tamil nadu BJP K. Annamalai
By Jiyath Jan 19, 2024 02:54 AM GMT
Report

தனக்கு முதலமைச்சர் பதவி ஆசை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது "3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை முக்கியத் தலைவர்கள் ஒன்றாக சந்தித்துப் பேசுவோம்.

எனக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை - அண்ணாமலை பேட்டி! | Bjp Annamalai About Cm Post

அதுபோலத்தான் கோவையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் தமிழகம் வருகிறார்.

இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது. அயோத்தி ராமர் கோயில் குறித்து பேசுவதற்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

பதவி ஆசையா?

ஆளுநர் தமிழ்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஆளுநர் வரம்பு மீறியதாக உச்சநீதிமன்றம் சொல்லவில்லை.

எனக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை - அண்ணாமலை பேட்டி! | Bjp Annamalai About Cm Post

முதலில் ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, கண்ணாடியை பார்த்து ஆட்சி எப்படி நடத்துவது என்பதை தெரிந்து கொள்ளட்டும். எனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை.

என்னை பொறுத்தவரை பல தலைவர்களை உருவாக்குவது. பதவி ஆசை பிடித்த சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். என்னைவிட திறமையான தகுதியான பல தலைவர்கள் பாஜகவில் உள்ளனர்" என்றார்.