திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொலையாளிகள்,குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு!

BJP K. Annamalai Cuddalore Crime Death
By Jiyath Oct 03, 2023 08:50 AM GMT
Report

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொலையாளிகள்,குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கொலை

கடலூர் மாவட்டம் மேல் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா (17). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொலையாளிகள்,குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு! | Bjp Annamalai Abaout Dmk Government

இன்று காலை 8 மணிக்கு ஜீவா பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஜீவாவை கத்தியால் சரமாரியாக குத்திவீட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதில் மாணவன் ஜீவா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள்?

அதில் "கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொலையாளிகள்,குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு! | Bjp Annamalai Abaout Dmk Government

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சட்டம் ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதலமைச்சர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.

முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?