கூட்டணியில் மாற்றம்; அதனால்தான் சந்தித்து பேசினேன் - நயினார் சூசகம்
அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி மாற்றம்
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம். சில கட்சிகள் வந்து சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அமித்ஷாவிடம் உத்தேச பட்டியலை வழங்கியதாக வெளியான தகவல் தவறானது.
நயினார் தகவல்
மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.