பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் இவை தான்.! வெளியிட்ட அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 40 இடங்கள் வரை பாஜக கேட்டு வந்த நிலையில் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு 20 இடங்கள் மட்டுமே அதிமுக ஒதுக்கியிருந்தது.
எந்தெந்த தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தொகுதிகள், வேட்பாளர்கள் தொடர்பாக பல உத்தேச பட்டியல்கள் உலாவி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிமுக. சென்னையில் ஐந்து தொகுதிகள் வரை பாஜக கேட்டு வந்த நிலையில் துறைமுகம், ஆயிரம் விளக்கு என்கிற இரண்டு தொகுதிகளை மட்டுமே அதிமுக வழங்கியுள்ளது.
மேலு சேப்பாக்கம் தொகுதியிலும் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் சேப்பாக்கம் பாஜகவுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவிலே பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியலும் விரைவிலே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.