பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் மம்தா பானர்ஜி - தோல்வியடையுமா பாஜக ?
பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

டெல்லியில் சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் நிலவரம், பெகாசஸ், கோவிட் நிலைமை பற்றி விவாதித்தோம் என்றும், எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விவாதித்தோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.