பாஜகவுக்கு நடிக்க ஆட்கள் தேவைபடுகிறது: கே.எஸ் அழகிரி விமர்சனம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. அதிமுக 234 தொகுதிகளில், 170 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக இடம் கேட்க இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் நடிகை குஷ்பு மற்றும் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, பாஜகவில் நடிப்பதற்கு ஆட்கள் தேவைபடுகிறது. அதனால் தான் பல நடிகர்கள் பாஜகவில் சேர்கின்றனர் என விமர்சித்தார்.