ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார் - அண்ணாமலை!

Tamil nadu BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Jiyath May 24, 2024 02:38 AM GMT
Report

தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை         

நாடு முழுவதும் 5 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 6 மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார் - அண்ணாமலை! | Bjp 3Rd Largest Party In Southern State Annamalai

அந்தவகையில் தலைநகர் டெல்லியில் நாளை தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் "தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது.

மக்களவை தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் அரசியல்வாதி

2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அதிமுகவாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார் - அண்ணாமலை! | Bjp 3Rd Largest Party In Southern State Annamalai

ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அதிமுக விலகிவிட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பாஜகவாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அதிமுக வெகு தொலைவுக்கு விலகிவிட்டது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பாஜக பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.