“இதுல பொண்ணுங்களே இல்ல...என்னை ஏமாத்திட்டீங்க” - பிரபல வெப்சைட் மீது இளைஞர் வழக்கு

The Denver Dating Company
By Petchi Avudaiappan Oct 27, 2021 09:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் டேட்டிங் வெப்சைட் மீது இளைஞர் ஒருவர் வழக்கு தொடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பலநாட்டு மக்களின் உறவு நிலைகளை முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக மாற்றுவதில் டேட்டிங் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஒரு சில பிரபல டேட்டிங் நிறுவனங்கள் பயனாளர்கள் தங்கள் ப்ரொஃபைலில் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளாரா? இல்லையா? என்பதை தெரியப்படுத்தும் Vaccine Status நிலையை அளித்துள்ளன. 

இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் தலைநகரான டென்வர் நகரில், 29 வயதான இளைஞர் ஒருவர் டேட்டிங் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். டேட்டிங் வெப்சைட் மூலம் தனக்கு சரியான ஜோடி அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அந்த இளைஞர், குறிப்பிட்ட நிறுவனம் மூலம் சந்தித்த ஏமாற்றத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். 

டென்வர் நகரை சேர்ந்தவர் 29 வயதான இயன் கிராஸ் என்ற இளைஞர் உள்ளூர் டேட்டிங் நிறுவனமான HMZ Group நடத்தும் The Denver Dating Companyயின் டேட்டிங் வெப்சைட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்தாமல் ஏராளமான பெண்கள் தங்கள் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் இயன் கிராஸ் புகார் தெரிவித்து இருக்கிறார். இந்த டேட்டிங் வெப்சைட் வழக்கமான டேட்டிங் ஆப் அல்லது வெப்சைட் போல செயல்படாது.

தான் மெம்பர்ஷிப்காக 9,409 டாலர் பணம் கட்டியதாகவும், ஆனால் அதன் பின்னர் வெப்சைட்டிற்கு சென்று பார்த்தால் 18 - 35 வயது வரையிலான ரேஞ்சில் 5 பெண்கள் மட்டுமே இருப்பதை கண்டதாகவும் இயன் கிராஸ் தனது மனுவில் குற்றம்சாட்டி இருக்கிறார்.சேவையின் தரம் மற்றும் பண்புகள் குறித்து பொதுமக்களிடம் தவறான அபிப்ராயத்தை உருவாக்கும் மற்றும் போலி அல்லது கற்பனையான ஆன்லைன் ரிவ்யூக்களை வழங்கும் The Denver Dating Company நிறுவனம் தனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இயன் கிராஸ் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.