2 மனைவிகளுடன் வாரத்தில் 3 நாட்கள் .. 7வது நாளில் யாருடன் ? சர்ச்சையான கல்யாண ஒப்பந்தம்
உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் வித்தியாசமான முறையில், இரண்டு பெண்களுக்கு இடையே ஒரு தனிப்பட்டஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இரண்டுமனைவிகள்
ஒப்பந்தம் என்னவென்றால் இரண்டு பெண்களுமே ஒரே நபரைதான் திருமணம் செய்துள்ளனர். இதில், அந்த நபர் எத்தனை நாள்கள் இருவரோடும் தனித்தனியாக வசிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்ததின் மூலம், அந்த நபரின் மனைவிகள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். தங்கள் கணவர், வாரத்தில் தலா 3 நாள்கள் ஒருவருடன் இருக்க வேண்டும் எனவும், மீதம் இருக்கும் வாரத்தின் 7ஆவது நாளில், யாருடன் இருக்க வேண்டும் என்பதை தங்கள் கணவரே முடிவு எடுக்கட்டும் என ஒப்பந்ததில் மனைவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தின்படி, அவரது மனைவிகள் இருவரும் தங்கள் மாமியார்களுடன் வாழ்வார்கள். இரு மனைவிகளுக்கு இடையே தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டு மனைவிகளில் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பிறகே, இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு ஆலோசனைக்காக உத்தரப் பிரதேசத்தின் நாரி உத்தன் கேந்திராவுக்கு மாற்றப்பட்டது.
விநோத வழக்கு
இந்த வழக்கினை காவல்துறைக்கு உதவும் தனியார் குழு, இந்த வினோதமான முடிவை எடுத்தது. திங்கள் முதல் புதன் வரை கணவன் முதல் மனைவியுடன் இருப்பார் எனவும் அதேசமயம், வியாழன் முதல் சனிக்கிழமை வரை, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதும் மூவரும் ஒன்றாக வீட்டுக்குச் சென்றனர்.
இந்த செய்தி தற்போது உத்திரபிர்தேசத்தில் பேசு பொருளாகியுள்ளது.