பிரபாகரன் குறித்த தகவலை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி

Government of Tamil Nadu LTTE Leader
By Sumathi Feb 15, 2023 12:43 PM GMT
Report

பழநெடுமாறன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை தகவல்

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் குறித்து பழநெடுமாறன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் தலைவர் மனிந்தெர்ஜீட் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபாகரன் குறித்த தகவலை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி | Bitta Wants Tn To Clarify Claim On Ltte Chief

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான பயங்கரவாத கொள்கை உடையவர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்வது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளியான தகவல்களை நான் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன் என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாடு அரசாங்கம் இது குறித்து பதிலளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.