ஓரின சேர்க்கைக்காக சிறுவன் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்: 10 ஆண்டு சிறை தண்டனை
அரியலூரில் ஓரின சேர்க்கைக்காக சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயதுடைய ஞானம் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடந்த 2018 ஆம் ஆண்டு ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதனை கண்டறிந்த அச்சிறுவனின் தாய், ஞானம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு இன்று அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளியான ஞானத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.