பிரியாணியில் லெக் பீஸ் எங்க?திருமண நிகழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ!
திருமண நிகழ்வில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லை எனக் கூறி மணமகன் வீட்டார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலம், பரேல் மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்சில் சர்தாஜ் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் விருந்தினர் வருகைக்காக சிக்கன் பிரியாணி விருந்து தடபுடலாக தயாராகி கொண்டு இருந்தது.
அப்போது மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் விருந்து சாப்பிட வந்துள்ளனர்.அவர்களுக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எல்லாத்தையும் பெண் வீட்டாரே சாப்பிட்டு விட்டீர்களா? எனக் கேட்டு வம்பிழுத்தனர் .இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது
லெக் பீஸ்
.இதில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அங்குள்ள நாற்காலியைக் கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டன. இதனால் திருமண வீடு கலவர வீடானது.சுமார் அரை மணி நேரமாக நீடித்த சண்டையால் மணமகன் உள்ளே நுழைந்து, திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்தார்.
இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.