பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

By Irumporai Jul 12, 2022 08:23 AM GMT
Report

கண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே

குடையில்லா நேரம் பார்த்து கொட்டிப்போகும் மழையைப் போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே..

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு | Birthday Share For Poet Na Muthukumar

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சென்னையில் மனதை லேசாக்க காதருகே இந்த பாடலை கேட்டு ரசிக்காத உள்ளங்களே கிடையாது ,காயப்பட்ட மனதை தனது வரிகளால் ஆனந்த யாழினை மீட்டி ஆறுதல் வரிகளை கொடுத்தவர் நா, முத்துக்குமார். அவரது காதல் வரிகளை பயன்படுத்தாத காதலர்கள் இல்லை என்றே கூறலாம்.

‘7ஜி ரெயின்போ காலனி' படத்தின் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை...' பாடல் காதலர்களின் எவர்க்ரீன் விருப்பம்.

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு | Birthday Share For Poet Na Muthukumar

முதல் மழை எனை நனைத்ததே

ஒருதலைக் காதலின் துயரத்தை, காதல் கைகூடாத ஆற்றாமையை, நினைவில் கிடந்து அனத்தும் காதலின் நினைவுகளைப் பாடலாக இயற்றியிருப்பார்.அந்தப் படம் இன்றளவும் பேசப்படுவதற்கு இந்தப் பாடலின் வரிகளும் வலிகளும்கூடக் காரணம்தான்.

டெக்னாலஜி யுகத்தின் நவீன வார்த்தைகளைப் பயன்படுத்தி, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்துக்காக ‘​​​​​​​ஹே ஃபேஸ்புக் லாகின் பண்ணு... என் டைம்லைன் எல்லாம் பாரு...' என ஆன்லைன் பாடல் எழுதினார். ​​​​​​​

ஹார்ட்டிலே பேட்டரி என எல்லாம் நன்மைக்கே' எனும் நம்பிக்கை விதை தூவினார். ​​முதல் மழை எனை நனைத்ததே... எனக் காதலுக்கு டைட்டில் சாங் பாடினார். வேணாம் மச்சான் வேணாம்... இந்தப் பொண்ணுங்க காதலு... என சூப் சாங் பாடினார். ஆங்கிலம் கலந்தாலும் அதிலும் தமிழைப் பிழிந்தார். ​​​​​​​

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு | Birthday Share For Poet Na Muthukumar

ஒரு பாதி கதவு நீயடி...எனப் பல காதலர்களைச் சேர்த்துவைத்தார். காதலோடு கைகோத்து ஒரு மலையுச்சியின் பாறைப் பிளவுகளூடே பயணிக்கும் சில்லிடலைக் கொடுக்கும் இன்னும் பல பாடல்களையும் எழுத்தில் வடித்தார்.

​​​​​​சற்று முன்பு பார்த்த...' என்றெழுதி எப்போதோ பிரிந்த காதல்களைச் சேர்த்துவைத்தார்.

தொலையவிருந்த காதல்களுக்கு நெருக்கம் கூட்டினார். நா.முத்துக்குமாரின் கவிதைகளை இன்றைய தலைமுறையினர் கொண்டாட காரணம் அவரது வரிகள் தான் , இன்றைய சூழலில் வாழ்வியலின் வலிகளை மையிட்டு அழகுபடுத்தியவர்.

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு | Birthday Share For Poet Na Muthukumar

அதானால் தான் ரேடியோவில் அவருடைய பாடல்களை கேட்டபடி அவரின் வரிகளை முனுமுனுத்தபடி தன்னை ஆசுவாச படுத்தியவர்கள் ஏராளம் .

காதல மட்டும் அல்ல வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி போன்ற பாடல் மூலம் 90ஸ் கிட்களின் நினைவுகளை அசை போட வைத்த கால வித்தகன் நா. முத்துக்குமார்.

உன் பேரே தெரியாது

கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா

மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்..

நம் காதல் தடைகளைத் தாண்டும்

என்று சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் துன்பப்பட்டு பிரிய நேரும் காதலர்களுக்காக அவர் எழுதிய வரிகள் இன்னும் வருகிற காலங்களில் காதலிக்கப்போகும் காதலர்களுக்கும் பெரும் ஊக்கத்தைத் கொடுத்துக்கொண்டேயிருக்கும்.

அதே போல் ஒரு காதலன் தான் காதலித்த பென்ணிடம் செல்லாத காதலை ஒருநாள் அந்த பெண்ணை மீண்டும் ஒரு அறிமுகம் இல்லாத இடத்தில் சந்திக்கும் போது அதனை தனது வரிகளில் வாசித்திருப்பார் இவ்வாறு

ஏழை காதல் மலைகளில் தோன்றுகின்ற ஒரு நதியாகுமா

மண்ணில் விழுந்துமொரு காயமின்றி உடையாமல் உருண்டோடும் நதியாகிடுமோ?

 இதோ இதோ இந்த பயணத்திலே இதுபோதும் கண்மணி

வேறென்ன நானும் கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்.

 துயரம் மிகுந்த காதலர்களின் வலியை உணர்ந்து அவர்களை ஆறுதல் படுத்த நா. முத்துக்குமார் வரிகளால் விட்டு சென்ற மாமருந்து இவரது வரிகள்.

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு | Birthday Share For Poet Na Muthukumar

சட்டென பார்க்கும் ஒரு நபரின் மேல் வரும் காதலைனை ‘உன் பேரே தெரியாது... உன்னைக் கூப்பிட முடியாது... நான் உனக்கோர் பெயர் வைப்பேன்... உனக்கே தெரியாது என பெயர் தெரியாத காதலையும் பெயர் வைத்து வார்த்தைகளை தந்தவர்.

என்ன வாழ்க்கை இது வெறுத்து போன மனங்களுக்கு

மேகமென கலை

மோகம் வளர்த்து மித

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு

கால்கொலுசில் இசை உணர்

தாடி வளர்த்து தவி

எடை குறைந்து மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட திகட்ட காதலி


என வாழ்க்கையின் தத்துவத்தை கூறியிருப்பார்.

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு | Birthday Share For Poet Na Muthukumar

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்

தேனீர் கடையில் பாடிக்கொண்டிருக்கிறது

கடைசி பேருந்தினை விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது காதல்

முதல்காதலை எளிய வரியில் புரிய வைக்க முத்துக்குமாரை தவிர யாரும் இல்லை.

இவ்வாறு அனைத்து உறவுகளையும் தன் பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம்.. அவரைப் பார்த்து பறவையே எங்கு இருக்கிறாய்…?’ என்று மனம் குமுறும் போது அவரது வரிகள் இப்போதும் டீக்கடை புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிக்கிறது

இதயம் இந்த இதயம்

இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ

ஆம் அவர் அனைவரது இதயங்களிலும் இருகின்றார், ஏன் என்றால் அவன் பட்டாம்பூச்சி விற்பவன்  .