சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

By Nandhini May 31, 2022 12:50 PM GMT
Report

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்றிரவு சிக்கன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தி வருகின்றனர்.   

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு | Biriyani