சவர்மாவை தொடர்ந்து புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் - பரபரப்பு சம்பவம்

By Nandhini May 05, 2022 07:29 AM GMT
Report

கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல், ஆரணியில் மலையாம்பட்டு கிராமத்தில், களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் வாங்கி குடித்த 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சாலையோர பிரியாணி கடையில் வாங்கி வரப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 9 பேர் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.