என்ன அழகு.. வானில் இதய வடிவில் வட்டமடித்த பறவைகள் - வைரலாகும் அற்புத வீடியோ...!
சமூகவலைத்தளங்களில் வானில் இதய வடிவத்தில் பறவைகள் வட்டமடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வானில் பறவைகள் கூட்டம் பறந்து கொண்டிருக்கிறது.
அப்போது, திடீரென பறந்துக்கொண்டிருந்த பறவைகள் கூட்டம், யாரோ சொல்லி கொடுத்தார் போல், இதய வடிவில் ஒன்றுக்கொன்று இணைந்து பறக்கத் தொடங்கியது.
முதலில் 2 இதய வடிவில் பறக்க ஆரம்பித்த பறவைகள் கூட்டம், பின்னர், ஒரு இதய வடிவத்தில் பறக்க வானில் வட்டமடித்தது.
இதைப் பார்த்த ஒருவர் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது இந்த அற்புத அழகான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Amazing ? pic.twitter.com/vyohbKk2Ks
— ?ً (@tmbIrpics) August 31, 2022