விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டனர்.
முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் நீலகிரி வெளிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் 12 மணி அளவில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீ பிடித்து எறிந்தது.
அப்போது ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் குதித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து அறிவதற்கு ராணுவத்தினர் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தினர்.
விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்ப குழு,வெலிங்டன் ராணுவ மைய குழு கருப்பு பெட்டியை கண்டுப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்டுள்ள கருப்பு பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லி கொண்டு சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்.