‘’ உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே ‘’ - கர்ப்பமான சச்சின் பட நடிகை .. வைரலாகும் புகைப்படம்

Viral Photos
By Irumporai Aug 16, 2022 10:32 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

பிபாஷாபாசு 

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷாபாசுவும் நடிகர் கரண் சிங் குரோவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 6 வருடங்களை கழிந்துள்ள நிலையில், நடிகை பிபாசு பாசு கர்ப்பமாக உள்ளதாக கடந்த மார்ச் மாதமே தகவல் வெளியானது.

இந்த நிலையி நடிகை பிபாசு பாசு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கர்ப்ப செய்தியை அறிவித்ததோடு, கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அதில் புதிய நேரம், புதிய கட்டம், புதிய ஒளி எங்களுடைய வாழ்விற்கு தனித்துவமான ஷேடை கொடுத்திருக்கிறது. முன்பு இருந்ததை விட கொஞ்சம் முழுமையாக உணர்கிறோம். நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம்.

இருவர் மூவராகிடுவோம்

பின்னர் ஒருவரையொருவர் சந்தித்தோம். நாம் இருவர் மட்டுமே பகிர்ந்து கொண்ட அன்பு பார்ப்பதற்கே கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது.

‘’ உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே  ‘’ -  கர்ப்பமான சச்சின் பட நடிகை ..  வைரலாகும் புகைப்படம் | Bipasha Basu Pregnancy Maternity Photoshoot

இருவராக இருந்த நாம் மூவராகிவிடுவோம். எங்கள் அன்பால் வெளிப்படும் ஒரு படைப்பு, எங்கள் குழந்தை விரைவில் எங்களுடன் சேர்ந்து எங்கள் மகிழ்ச்சியை சேர்க்க இருக்கிறது. அனைவருக்கும் நன்றி, என தெரிவித்துள்ளார்.