3 மாத குழந்தை இதயத்தில் 2 ஓட்டைகள் - உடைந்து போன தாய் பிபாஷா பாசு
தனது 3 மாத குழந்தையின் இதயத்தில் 2 ஓட்டைகள் இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
பிபாஷா பாசு
விஜயின் சச்சின் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தவர் பிபாஷா பாசு. ஹிந்தி, பெங்காலி மொழி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் கரண் சிங் குரோவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குழந்தையின் இதயத்தில் ஓட்டை
இவர்களுக்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் பிபாஷா தன்னுடைய தாய்மை அனுபவத்தை குறித்து வீடியோ ஒன்றை பகிர்நது கொண்டார். அதில், பிறக்குப்போதே தனது குழந்தைக்கு இதயப்பிரச்சனை இருந்தது குறித்து மனம் வருந்தி தெரிவித்திருக்கிறார்.

பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு துளைகள் இருந்தன. பிறந்து மூன்றாவது நாளில் இதனை நாங்கள் அறிந்தோம். மிகவும் கடினமான காலத்தைக் கடந்தோம். குடும்பத்தில் யாரிடமும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை. எனக்கும் கரணுக்கும் ஐந்து மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தது என உருவகமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலை எந்த தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட கூடாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil