வீரப்பன் இணையத் தொடருக்கு தடை?
வீரப்பன் தொடர்பாக திரைப்படமோ, இணையத் தொடரோ எடுத்தால், தன்னிடம் அனுமதி பெறுமாறு அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தமிழ்நாட்டில் இப்போதும் பல இளைஞர்கள் வீரப்பனை கதாநாயகனாக பார்ப்பதாக கூறினார்.
ஆனால் அவரது புகழைக் கெடுக்கும் வகையில் திரைப்படங்கள், சமூக வலைதளங்களில் சிலர் வீரப்பனை தவறாக சித்தரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இனி வீரப்பனைப் பற்றி யார் திரைப்படம், குறும்படம் எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என கூறிய முத்துலெட்சுமி.
தனது கணவன்(வீரப்பன்) பெயரில் படம் எடுத்தாலே அது ஓடி விடும் என்று எண்ணுவதால், விளம்பரத்துக்காக அவரை தவறாக சித்தரித்து இணையத் தொடர் எடுக்கும் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் மீது வழக்கு தொடர இருப்பதாக முத்துலட்சுமி கூறினார்.