இந்திய வீரர்களை மிரள வைத்த இலங்கை வீரரின் அசத்தலான கேட்ச் - வைரல் வீடியோ

INDvSL binurafernando
By Petchi Avudaiappan Feb 27, 2022 12:28 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இலங்கை வீரர் பினுரா ஃபெர்னாண்டோ ஃபீல்டிங் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நேற்று இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி  17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் சுமார் 7 மாதங்களுக்குப் பின் களமிறங்கிய இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் இலங்கை அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினார்.

குறிப்பாக லஹிரு குமாரா வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில் 4, 6, 6, 6 என தொடர்ச்சியாக ரன் மழைப்பொழிந்த நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வைட் திசையில் லஹிரு குமாரா வீசிய பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்ட நினைக்க விளாச அது பேட்டில் எட்ஜானது.

ஆனால் பந்தின் அதிக வேகம் காரணமாக ஃபீல்டரின் தலைக்கு மேல் சென்று பவுண்டரிக்கு சென்றுவிடும் என்று இலங்கை வீரர்கள் சோகத்தில் இருந்தனர். அப்போது ஸ்லிப்பில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த இலங்கை வீரர் பினுரா ஃபெர்னாண்டோ பாய்ந்து சென்று அந்த கேட்சை பிடித்து இந்திய வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பினுரா ஃபெர்னாண்டோ பாராட்டைப் பெற்று வருகிறார்.