இரட்டை கோபுர தாக்குதலுக்கும் ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பே இல்லை... தலிபான் செய்தித் தொடர்பாளர்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு எந்த தொடர்புமே இல்லை அதற்கான ஒரு ஆதாரமும் கிடையாது என்று தாலிபான்கள் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் தற்போது தலிபன்கள் ஆக்கிரமித்துள்ளதால் பதட்ட நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில் தாலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், என்.பி.சி. டிவிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பிருக்கிறது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்றும் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்காகவே நடத்தப்பட்ட 20 ஆண்டு காலமாக யுத்தத்தின் பின்னும் கூட ஒசாமா பின்லேடனுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவும் இல்லை. ஆப்கானில் யுத்தம் நடத்துவதற்கு அமெரிக்கா சொல்லுகிற ஒரு சாக்குப் போக்கு காரணம்தான் அது. இந்த யுத்தத்தை நியாயப்படுத்த முடியாது என கூறினார்.
As the Afghanistan evacuation speeds up, @RichardEngel presses a Taliban spokesperson over their claims that things will be different. pic.twitter.com/Gy7Rj4R7U4
— NBC Nightly News with Lester Holt (@NBCNightlyNews) August 25, 2021