நாய்களை வைத்து ரசாயன ஆயுத சோதனை : ஒசாமா பின்லேடன் மகன் அதிர்ச்சி தகவல்
ஒசாமா பின்லேடன் தனது வளர்ப்பு நாய்களை ரசாயன ஆயுத சோதனைக்காக பயன்படுத்தினார் என பின்லேடனின் மகன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
ஒசாமா மகன்
உலக நாடுகளை அதிர வைத்த பயங்கரவாதி என்றால் அது அல்கொய்தா தலைவராக இருந்த மறைந்த ஒசாமா பின்லேடன் தான். அதுவும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக அவன் இருந்தான் என்றே கூற வேண்டும். பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்க ராணுவம் கடந்த 2011 மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தவனை சுட்டு கொன்றது.
திடுக்கிடும் தகவல்
பின்லேடன மறைந்தாலும் அவரை சுற்றி பல மர்மங்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளது . பின்லேடன் மகன்களின் ஒருவரான உமர் பின்லேடன் அண்மையில் கத்தாருக்கு வந்திருந்த போது தனது தந்தை பற்றி ஒரு சில திடுக்கிடும் விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வளர்ப்பு நாய்களுக்கு ரசாயன சோதனை
அதாவது பின்லேடன் தனது வளர்ப்பு நாய்களை ரசாயன ஆயுத சோதனைக்கு உட்படுத்தினராம். மேலும், உமருக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்துள்ளார் பின்லேடன்.மேலும் தனது தந்தையை பற்றி பகிர்ந்து கொண்ட உமர் பின்லேடன், தான் தந்தையுடனான கசப்பான நினைவுகளை மறக்க நினைக்கிறேன் எனவும் குறிப்பிட்டார். அவர் தனது வழியை பின்பற்றாமல் முற்றிலும் மாறுபட்ட ஓர் வாழ்வை வாழ்ந்து வந்தவர் எனக் கூரினார்.