11 வயதில் ஆபாச படம் பார்த்தேன் - பிரபல பாடகிக்கு நேர்ந்த மோசமான அனுபவம்
11 வயதில் இருந்து ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்ததால், தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபங்கள் குறித்து பிரபல அமெரிக்க பாடகி பில் எய்லிஷ் கருத்து தெரிவித்துள்ளது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது பிரபல பாடகி பில் எய்லிஷ் உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 163 முறை இவர் பல்வேறு இசை தொடர்பான விருதுகளுக்கு பரிந்து செய்யப்பட்டு, 64 விருதுகளை வாங்கியுள்ளார். அவற்றுள் 7 கிராம்மி விருதுகள் அடங்கும்.
இந்நிலையில் ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த எய்லிஷ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் நான் சின்ன வயதிலேயே ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன். நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றால், நான் அதிக எண்ணிக்கையில் அந்த படங்களை பார்ப்பேன்.
எனக்கு 11 வயதுதான் இருக்கும் போது அதனை அதிகமாக பார்த்ததால் எனது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது என்னை ஆபாசமாக நடந்து கொள்ளவும் வழி வகுத்தது. மேலும் ஆபாச படங்களில் இடம்பெற்றிருந்த காட்சிகள், என் மனதை காயப்படுத்திய நிலையில் அவற்றை பார்ப்பது கெட்ட பழக்கம் என்று முதலில் எனக்கு தெரியாது எனவும் பில் எய்லிஷ் கூறியுள்ளார்.
உடலுறவை கற்றுக் கொள்ளும் ஒரு கல்வியாகத்தான் அதை நான் பார்த்தேன் நீங்கள் அதிகமாக ஆபாச படங்கள் பார்த்தீர்கள் என்றால் இயல்பான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் இளம் வயதில் ஆபாச படங்களை பார்ப்பது மனநிலை பாதிப்பு, மோசமான உடல்நிலை போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் எதிர்மறையான போக்கை உருவாக்கும்'' என்று சிறார் நலனுக்கான ஐ.நா. அமைப்பான யூனிசெஃப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.