புதியதை சோதித்து பார்க்கும் ஆய்வகம் இந்தியா - பில்கேட்ஸ் பேச்சால் சர்ச்சை

India Bill Gates
By Karthikraja Dec 04, 2024 09:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

இந்தியா புதிய விஷயங்களை சோதித்து பார்க்கவும் ஆய்வகம் என பில்கேட்ஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். 

billgates india lab

இந்நிலையில் இந்தியா குறித்து பில்கேட்ஸின் பேச்சுக்கு சமூகவலைதளத்தில் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஒரு ஆய்வகம்

பிரபல தொழிலதிபரான ரீட் ஹாஃப்மேன் உடன் பில்கேட்ஸ் பாட்காஸ்ட் ஒன்றில் கலந்து கொண்டார். இதில் இந்தியா குறித்த கேள்விக்கு, ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் மிக கடினமாக கிடைக்கும் நாட்டிற்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டு. இன்னும் 20 ஆண்டுகளில் இந்த துறைகளில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். 

billgates india as laboratory

பல்வேறு புதிய விஷயங்களை சோதிப்பதற்கான ஆய்வகம் இந்தியா. இந்தியாவில் ஒரு விஷயம் முடிகிறது என்றால் உலகின் எந்த பகுதியிலும் அதனை கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக எண்களின் பெரிய அலுவலகம் இந்தியாவில்தான் உள்ளது" என பேசினார்.

2009 சோதனை

இந்தியர்கள் என்ன சோதனை எலிகளா என பில்கேட்ஸின் இந்த பேச்சுக்கு இந்தியர்கள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளை சுட்டிக்காட்டி பலரும் பேசி வருகின்றனர். 

ICMR உடன் இணைத்து 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் சில மாதங்களுக்கு பின்னர், பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதோடு, 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்பிறகு வேறு காரணங்கள் என விளக்கமளிக்கப்பட்டது.